• Fri. Nov 24th, 2023

ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதியா?

Aug 18, 2021

ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் நடக்க உள்ள எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

மைதானங்களில் 60 சதவீத ரசிகர்களை அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகியவற்றிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.