• Fri. Jul 19th, 2024

ஆல் ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடம்!

Mar 9, 2022

ஐசிசி, இன்று டெஸ்ட் போட்டியில்சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் ,ஆல் ரவுண்டர்களின் தரவரிசை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார் .

2 வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் ,3 வது இடத்தில் இந்திய அணியின் அஸ்வின் உள்ளனர் .

பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் , ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார் .

இந்திய அணியின் விராட் கோலி 5 வது இடத்திலும் ,ரோகித் சர்மா 6 வது இடத்திலும் ,ரிஷாப் பண்ட் 10 வது இடத்திலும் உள்ளனர் .

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ,ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும் .

இந்திய அணியின் அஸ்வின் 2வது இடத்திலும் , தென் ஆப்பிரிக்கா அணியின் ரபாடா 3வது இடத்திலும் உள்ளனர்.