• Sun. Nov 17th, 2024

இந்திய வீரரை பாராட்டிய குமார் சங்ககரா!

Mar 22, 2022

இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா ஐ.பி. எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குனராக உள்ளார்.

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் 10 அணிகள் விளையாடுகின்றன.

கொரோனா காரணமாக ‘லீக்’ போட்டிகள் அனைத்தும் மராட்டிய மாநிலத்தில் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே, பிராபோர்ன், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மற்றும் புனே எம்.சி.ஏ. மைதானம் ஆகிய 4 ஸ்டேடியங்களில் போட்டி நடக்கிறது.

இந்த நிலையில் 20 ஓவர் போட்டிகளில் சிறந்த வீரர்களில் சஞ்சு சாம்சனும் ஒருவர் என்று இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா தெரிவித்துள்ளார்.

44 வயதான அவர் ஐ.பி. எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குனராக உள்ளார்.

அவர் தனது அணியின் கேப்டன் சாம்சனை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக சங்ககரா கூறியதாவது:-

சஞ்சு சாம்சன் சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர் ஆவார். அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் 20 ஓவர் போட்டிக்கு சிறந்த வீரர் ஆவார்.

பதவியில் மேம்பட்டு வருகிறார். அவர் ஒரு அற்புதமான வீரர். அபாரமான பேட்ஸ்மேன். எதிர் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர். மேட்ச் வின்னர் ஆவார். ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேனுக்கு உரிய அனைத்து திறமைகளும் அவரிடம் இருக்கிறது. அவர் ஒரு கேப்டனாக தனக்கு இன்னும் எல்லாம் தெரியாது என்று ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறார்.

இயற்கையாகவே சாம்சனுக்கு தலைமைக்கான குணங்கள் இருக்கின்றன. அவர் சிறந்த கேப்டனாக ஜொலிப்பார்,

ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பே சங்ககரா தனது அணியின் கேப்டனை வெகுவாக பாராட்டி உள்ளார்.