இலங்கை அணியுடனான மிக்கி ஆர்தரின் நாட்கள் முடிவிற்கு வரவுள்ளமை உறுதியாகியுள்ளதை அணியின் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக மகேல ஜெயவர்த்தனவை Consultant Coach நியமிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
மகேல ஜெயவர்த்தனவை இலங்கை அணியின் Consultant Coachஆக நியமிப்பதற்கான முயற்சிகளில் கிரிக்கெட் தொழில்நுட்ப குழு ஈடுபடவுள்ளது.
இதற்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வழங்கியுள்ளது.
மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் மி;க்கி ஆர்தர் விடைபெற்ற பின்னர் மகேல ஆக நியமிக்கப்படுவார்.
ஆனால் அணியை எப்படி நிர்வகிக்கவேண்டும் என்பது உட்பட பல விடயங்களை தீர்மானிக்கின்ற அதிகாரம் அவருக்கு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகின்றன.
இலங்கை அணி பல ஆலோசகர் பயிற்சியாளர்களை nநியமிக்கவுள்ளது லசித்மலிங்க ரங்கனஹேரத் நுவான் குலசேகர போன்றவர்களையும் உள்வாங்கும் திட்டம் காணப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகேல ஜெயவர்த்தன இரண்டு வருடங்கள் ஆலோசகர் பயிற்சியாளராக பணிபுரிவார் அவர் அக்காலப்பகுதியில் தேசிய அணி ஏ அணி மற்றும் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான அணி ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுவார் எனவும் கூறப்படுகின்றது .
மகேல ஜெயவர்த்தன லீக் அணிகளின் பயிற்சியாளராக செயற்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை பின்பற்றி நாங்கள் உள்நாட்டு பயிற்றுவிப்பாளர்களையே நியமிக்கப்போகின்றோம்,உள்நாட்டை சேர்ந்த ஒருவரை நியமிக்க முடியாவிட்டால் மாத்திரமே வெளிநாட்டவரை தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிப்போம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகேல இணக்கம் வெளியிட்டால் நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம்- ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைஅணியிடம் அவர் ஏற்றிய மாற்றத்தை நாங்கள் பார்த்தோம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.