• Sat. Jul 27th, 2024

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் : நவாமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி

Apr 1, 2022

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஜப்பான் நாட்டின் நவாமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் மியாமி ஓபன் சர்வதேச போட்டி நடைபெற்று வருகிறது
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவாமி ஒசாகா, அமெரிக்க வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டு வீராங்கனையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக ஜப்பான் வீராங்கனை நவாமி தகுதி பெற்றுள்ளார்.