• Fri. Jul 26th, 2024

காலையில் முன்னாள் வீரருக்கு இரங்கல்.. மாலையில் மாரடைப்பு.. உயிரிழந்த கிரிக்கெட் ஜாம்பவான்

Mar 4, 2022

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானுமான ஷேன்வோர்ன் தன்னுடைய 52 வயதில் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தாய்லாந்தில் இருந்த ஷேன்வோர்ன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தகவல்கள் குறித்து எந்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. கிரிக்கெட் உலகில் பல அரிய சாதனைகளை படைத்துள்ள ஷேன்வோர்ன் மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.

கிரிக்கெட் உலகின் சிறந்த விக்கெட்டுகள் அல்லது பந்துகள் எது என எடுத்துக் கொண்டால் ஷேன்வோர்ன் சுழல் ஜாலத்துக்கு நிச்சயம் இடமுண்டு.

முன்னதாக இன்று காலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் மற்றொரு ஜாம்பவான் ரொட்னி மாஸ் உயிரிழந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தி ஷேன்வோர்ன்ட்வீட் செய்திருந்தார். அதே நாளில்அவர்
மாராடைப்பால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.