• Thu. Nov 14th, 2024

18 ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் செல்லும் நியூஸிலாந்து அணி

Aug 5, 2021

18 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் செப்டெம்பரில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து, ராவல்பிண்டி மற்றும் லாகூரில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகளில் விளையாடும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இன்று உறுதிபடுத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு லாகூரில் உள்ள கடாபி மைதானத்திற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கிய அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்வதைத் தவிர்த்தன.

இறுதியாக 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து, 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கிண்ணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியனாகவும் மாறியுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தை உறுதிபடுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி வாசிம் கான், கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியினரின் வருகை “பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான நாடு என்ற பாகிஸ்தானின் நிலையை வலுப்படுத்தும்” என்று கான் கூறினார்.

இந்நிலையில் வரும் செப்டெம்பர் 17 அன்று ஆரம்பமாகவும் ஒருநாள் தொடர் ராவல்பிண்டியில் நடைபெறும், அதேநேரத்தில் டி-20 போட்டிகள் லாகூரில் இடம்பெறவுள்ளது.