
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிறிஸ்டசர்ச் மைதானத்தில் இன்று நடைபெறும் 24 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் பலப்பரீச்சை நடத்தி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் ஹெதர் நைட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நஹிதா கான் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை சிட்ரா அமீன் 32 ரன்கள் குவித்து பிரன்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்த வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 41.3 ஓவர்கள் முடிவில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பிரன்ட் மற்றும் சோபி எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.