பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. முதல் தொடரை இழந்துள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட்டை வென்று தொடரை சமன் செய்துள்ளது.
ஜமைக்காவில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 302 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஆலம் சதமடித்து அசத்தினார். பின்னர் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய 176 ரன்கள் சேர்த்து டிக்ளெர் செய்தது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 329 ரன்கள் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 219 ரன்கள் மட்டுமே சேர்த்து விக்கெட்களை இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.