• Thu. Oct 31st, 2024

டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

Oct 30, 2021

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

குருப் பி பிரிவில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அரை சதம் அடித்தார். எனவே அந்த அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.