• Mon. Dec 2nd, 2024

11 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பும் வீரர்

Mar 23, 2022

ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ வாட் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு திரும்புகிறார்.

ஆஸ்திரேலிய அணியின் லிமிடெட் ஓவர் விக்கெட் கீப்பராக இருந்து வருபவர் மேத்யூ வேட். சமீபத்தில் ஆஸி அணி உலகக்கோப்பை டி 20 தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது இவரின் பேட்டிங். பாகிஸ்தானுகு எதிரான அரையிறுதியில் இக்கட்டான நிலையில் ஷாகீன் அப்ரிடி வீசிய பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெறவைத்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.

இந்நிலையில் இப்போது இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாட உள்ளார். இவர் ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதன் பிறகு அவர் 11 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் தொடருக்கு வர உள்ளார். குஜராத் அணியை இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தலைமை ஏற்று வழிநடத்த உள்ளார்.