• Tue. Apr 16th, 2024

ரி20 போட்டி; இலங்கை அணியின் ஆலோசகராக மகேல நியமனம்

Sep 24, 2021

ரி20 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கான ஆலோசகராக மகேலஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் மகேல முதல்சுற்றுவரையே ஆலோசகராக செயற்படுவார் எனவும் கூறப்படுகின்றது.

தற்போது மும்பாய் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக உள்ள மகேல ஐபிஎல் போட்டிகளின் பின்னர் இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார்.

ஒக்டோபர் 16 முதல் 23 வரை மகேல தனது பரந்துபட்ட அனுபவத்தையும் மிகவும் பெறுமதி மிக்க தனது மூலோபாய ஆதரவையும் வழங்குவார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.