• Sun. Dec 8th, 2024

மீண்டும் கேப்டனாகிறார் ஷ்ரேயாஸ் அய்யர்!

Feb 16, 2022

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது.

15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருருவில் சமீபத்தில் தொடங்கி. 2 நாட்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் அய்யரை 12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.இந்நிலையில் அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்துள்ளது.

ஏற்கனவே டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் அய்யர் அந்த அணியால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.