• Tue. Dec 5th, 2023

எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் விளையாட இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒப்பந்தம்

Aug 26, 2021

இலங்கை கிரிக்கெட் வீரரான சீக்குகே பிரசன்ன, நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன்மூலம், ஒப்பந்தம் செய்யப்பட்ட தினேஷ் சந்திமால் பைரவா கிளேடியேட்டர்ஸ் அணிக்காகவும், சீக்குகே பிரசன்ன சித்வான் டைகர்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளனர்.

4 ஆவது அத்தியாயமாக நடைபெறும் எவரெஸ்ட் தொடரில் நடப்புச் சம்பியனான லலித்பூர் பெட்ரியொட்ஸ், ‍பைரவா கிளேடியேட்டர்ஸ், பிரட்நகர் வோரியர்ஸ், சித்வான் டைகர்ஸ், கத்மன்டு கிங்ஸ் லெவன், பொகஹரா ரைனோஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.