• Fri. Apr 19th, 2024

டி-20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்திய நமீபியா

Oct 20, 2021

ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து நெதர்லாந்து அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மேக்ஸ் ஒடொவுட் 56 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.

இது தவிர அதிகபட்சமாக கோலின் அகெர்மேன் 35 ரன்கள் அடித்து கேட்ச் ஆனார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நமீபியா அணி களமிறங்கியது.

அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வெய்ஸ் 66 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து நமீபியா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.