• Mon. Jul 22nd, 2024

டி10 தொடரில் வரலாறு படைத்தார் இங்கிலாந்தின் அதிரடி மன்னன்

Dec 2, 2021

டி20 கிரிக்கெட்டுக்கு உலகம் நெடுக பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் 10 ஒவர் கிரிக்கெட்டான டி10 கிரிக்கெட்டும் ஒருபுறம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதில் அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் டாம் கோலர் காட்மோர் என்ற இங்கிலாந்து வீரர் 39 பந்துகளில் 96 ரன்கள் விளாசி சதத்தை 4 ரன்களில் கோட்டை விட்டார், ஆனால் டி10 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்து வரலாறு படைத்தார்.

டெக்கான் கிளாடியேட்டர் அணிக்கு ஆடும் இங்கிலாந்து வீரர் டாம் கோலர் காட்மோர் டி10 கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரை எடுத்த முதல் வீரர் ஆனார்.

இவரது இந்த அதிரடியினால் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தியது.

டாம் கோலர் காட்மோரின் அதிரடியினால் 10 ஓவர்களில் 140/1 என்ற ஸ்கோரை எட்டியது டெக்கான் கிளாடியேட்டர் அணி.

தொடர்ந்து ஆடிய பங்களா டைகர்ஸ் அணி 8.3 ஓவர்களில் 78 ரன்களுக்கு மடிந்தது. இதில் ஸ்பின்னர் ஹசரங்கா டிசில்வா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

4 ரன்களில் டி10 கிரிக்கெட்டின் முதல் சத நாயகன் என்ற வாய்ப்பைத் தவறவிட்ட காட்மோர் கூறும்போது,

“மிகவும் ஷேம், அதுவும் 100க்கு அருகில் வந்து விடுவது கூடாது. முதல் 100 என்பது எப்பவும் திருப்தி தரக்கூடியது, ஆனால் எங்கு போகப்போகிறது இன்னும் போட்டிகள் இருக்கின்றன, அடுத்த போட்டி என்ற ஒன்று எப்பவும் உண்டு.

இந்தப் போட்டியில் அபாரமாக வீசினோம், பங்களா டைகர்ஸ் அணியை கட்டிப்போட்டது திருப்தி அளிக்கிறது” என்றார்.

இந்த ஸ்கோருக்கு முன்பாக காட்மோர் எடுத்த இதே தொடர் ஹை ஸ்கோர் என்னவெனில் 51. இதோடு இவரை 6 முறை ஒற்றை இலக்கத்தில் எதிரணியினர் காலி செய்திருக்கின்றனர்.

இந்த வெற்றிக்குப் பிறகு கிளாடியேட்டர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது. டீம் அபுதாபி 9 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் டெல்லி புல்ஸ் அணி சென்னை பிரேவ்ஸ் அணியை வெற்றி பெற்றது.