• Sat. Dec 9th, 2023

இலங்கை – தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதி கிரிக்கெட் போட்டி

Sep 7, 2021

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(07) இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரமேதாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

இதற்கமைய இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாக அமையவுள்ளது.