இலங்கையில் இந்திய டெல்டா வைரஸ் தொற்று உள்ள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 14 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்ட 141 மாதிரிகளில் 14 பேருக்கு இந்திய டெல்டா வைரஸ் தொற்று உள்ளதாக உறுதியாகியுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த தொற்றாளர்கள் , கொழும்பு , காலி , திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக தெமட்டகொடை பகுதியில் 5 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.