• Fri. May 9th, 2025

மூன்றாவது அலை வரவே கூடாது; நடிகர் சூரி

Jul 14, 2021

கொரோனா இரண்டாவது அலை எல்லாரையும் செஞ்சு, செதுக்கிவிட்டு போயிருப்பதாக கூறிய நடிகர் சூரி, மூன்றாவது அலை வரவே கூடாது என தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் தனியார் நிறுவனம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்துகொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.