• Sun. Dec 22nd, 2024

முதல் நாடாக இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ்!

Jul 30, 2021

இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் கொரோன தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நாஃப்டாலி பென்னட் (Naftali Bennett)அறிவித்துள்ளார்.

இதன்மூலம் உலக நாடுகளில் பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது.

இதுதொடர்பில் பிரதமர் நாஃப்டாலி பென்னட் (Naftali Bennett)கூறுகையில், தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன.

தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பிலிருந்து தடுப்பூசிகள் பாதுகாக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது.

அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய காய்ச்சல் தடுப்பூசிகளைப் போல, கொரோனா தடுப்பூசிகளும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

அதன்படி, நாட்டில் ஏற்கெனவே இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.

அத்துடன் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் (isaac herzog) முதல் நபராக இன்று மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வார் என்றும், பொதுமக்களுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்’ எனவும் அவர் கூறினார்.

இதேவேளை மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கு அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ இதுவரை அனுமதி வழங்கவில்லை.

மேலும் மூன்றாவது டோஸ் உதவி செய்யும் என இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.