இலங்கையில் நேற்றைய தினம் 3,039 புதிய கொரோனா நோயாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 345,118 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று(12) கொரோனா தொற்றுக்குள்ளான 2,049 நபர்கள் கொவிட் -19 இலிருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 302,455 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது இலங்கை முழுவதும் 37,043 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.