உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 கோடியை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 210,050,202 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்தை கடந்துள்ளது.
இதன்படி கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,404,202 ஆக அதிகரித்துள்ளது.
அதிகளவான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,021 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தனர்.
அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 944 பேரும், ரஷ்யாவில் 799 பேரும், இந்தியாவில் 511 பேரும், இந்தோனேசியாவில் 1,128 பேரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்தனர்.
இதுதவிர மெக்ஸிக்கோவில் 877 பேரும், தென்னாப்பிரிக்காவில் 384 பேரும், ஸ்பெயினில் 144 பேரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.