• Mon. Dec 30th, 2024

இந்தியாவில் புதிதாக 34,973 பேருக்கு தொற்று!

Sep 10, 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 31 இலட்சத்து 74 ஆயிரத்து 954 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 42ஆயிரத்து 009 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37 ஆயிரத்து 681 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3கோடியே 23இலட்சத்து 42 ஆயிரத்து 299 ஆக காணப்படுகின்றது.

மேலும், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3இலட்சத்து 90ஆயிரத்து 646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.