• Tue. Nov 5th, 2024

2000 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா

Apr 5, 2022

சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் புதிய செயல்திட்டம் கொண்டு வரப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

போக்குவரத்து துறைக்கு என தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்தார்.