• Wed. Nov 20th, 2024

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று

Sep 14, 2021

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று(14) அமெரிக்காவின் நியூ​யோர்க்கில் ஆரம்பமாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

“நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை உருவாக்குதல், கொவிட் 19ஐ ஒடுக்குவதன் மூலம் உலக ஸ்திரத்தன்மையை மீண்டும் உருவாக்குதல், கிரகத்தின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் ஐக்கிய நாடுகளின் சகவாழ்வை புதுப்பித்தல்” ஆகியவற்றில் கவனம் செலுத்துவது கூட்டத்தொடரின் நோக்கமாகவுள்ளது.

ஐ.நா அமர்வை சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அரச தலைவர்களின் 76ஆவது அமர்வு நியூயார்க்கில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.

இக்கூட்டத் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றவுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி கோட்டாபய உரையாற்றுவது இதுவே முதல் முறை என்பதுடன், இலங்கைக்கு வெளியேயான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றும் முதல் சந்தர்ப்பமும் ஆகும்.

மேலும், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பங்கு பெறவுள்ளனர்.