• Wed. Nov 20th, 2024

காபூல் குண்டு வெடிப்பில் தப்பிய சிறுவன் தந்தையுடன் இணைந்த நெகிழ்ச்சியான தருணம்!

Sep 15, 2021

காபுல் விமான நிலைய குண்டுவெடிப்பில் சிக்கிய மூன்று வயது சிறுவன் கட்டாரில் தனித்திருந்த பின்னர் கனடாவில் உள்ள தந்தையுடன் இணைந்துகொண்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அலி தனது புத்தகத்தில் படங்களை வரைந்தபடி பிடித்தமான படங்களை பார்த்தபடி அலி 14 மணிநேர விமானபயணத்தை மேற்கொண்டு கனடாவின் ரொரன்டோவை சென்றடைந்தான்.

காபுல் விமானநிலையத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின் பின்னர் அங்கிருந்து தப்பி கட்டார் சென்ற அலி இரண்டு வாரங்கள் கட்டாரில் தனியாக நின்றான்.

அவன் அற்புதமான சிறுவன் அவனது வயதினை கருத்தில் கொள்ளும் மிகவும் முதிர்ச்சியுடம் சிறந்த விதமாகவும் நடந்துகொண்டான்,என தெரிவிக்கின்றார் புலம்பெயர்விற்கான ஐநா அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் ஸ்டெல்லாசுரின் அவரே அலியுடன் கனடாவிலிருந்து கட்டார் சென்றார்.

ஆப்கானில் உள்ள குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக அலி என அழைக்கப்படும் அந்த சிறுவன் 28ஆம் திகதி ஏனைய அகதிகளுடன் டோகாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டான்.

திங்கட்கிழமை ,ஐநா கனடா கட்டார் அரசாங்கங்களின் முயற்சி காரணமாக ரொரன்டோவின் பியர்சன் விமானநிலையத்தில் காலடிஎடுத்துவைத்தான்,

இந்த சிறுவன் பாதுகாப்பாக கனடா வந்துசேருவதற்கு 17 வயது சிறுவன் ஒருவனின் துணிச்சலான நடவடிக்கையே காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.

விமானநிலையத்தில் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பெரும் குழப்பத்திற்கு மத்தியில் 17 வயது சிறுவன் ஒருவன் இந்த மூன்று வயது சிறுவனை பார்த்துள்ளான்.

17வயது சிறுவன் மிகவும் துணிச்சலாக செயற்பட்டு 3 வயது சிறுவனை காப்பாற்றும் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டான் என கட்டார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானில் உலர்பழங்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த அலியின் தந்தை இரண்டு வருடங்களிற்கு முன்னர் கனடா வந்துள்ளார்.

அவர் தனது மகன் குடும்பத்திலிருந்து பிரிந்த பின்னர் அவனிற்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

தனது மகனை விமானநிலையத்தில் சந்தித்த பின்னர் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் மூலம் கருத்துவெளியிட்ட அவர் தனக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என தெரிவித்தார்.

இதேவேளை இரண்டு வாரங்களின் முன்னர் விமானநிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிலிருந்து தப்பிய தாயும் நான்கு சகோதரர்களும் உறவினர்களும் ஆப்கானில் மறைந்து வாழ்கின்றனர்.

அவர்கள் ஆப்கானிலிருந்து தப்புவதற்கான வழிவகைகள் இல்லாதமை குறித்து கடும் அச்சமடைந்துள்ளனர்.

விமானநிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது தனது அனைத்து பிள்ளைகளும் கொல்லப்பட்டுவிட்டனர் என தான் அஞ்சியதாக குறுஞ்செய்தியொன்றில் தயார் தெரிவித்திருந்தார்.

எனினும் அலியைத் தவிர ஏனையவர்கள் விமானநிலையத்திலிருந்து திரும்பிவந்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சிறுவன் அலி தன் தந்தையிடம் சேர்வதற்கு உதவியாக இருந்த அந்த இளைஞருக்கு பல்லரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.