• Mon. Dec 30th, 2024

அடுத்த 3 மாதங்களுக்கு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க எச்சரிக்கை

Sep 18, 2021

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குக் கொரொனா வைரஸ் பரவியது. தற்போது இந்தியாவில் கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. விரைவில் கொரொனா 3 அலை பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் 18 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு அரசு இலவசமாகவே கொரொனா தடுப்பூசி வழங்கி வருவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் அபாயகரமான கொரொனா வகை இல்லை எனத் தேசிய நோய்க் கடுப்பாட்டு இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரொனா நிலவரம் கட்டுக்குள் இருப்பதால் மக்கள் நெரிசலான இடங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் அடுத்த 3 மாதங்களுக்கு மக்கள் கொரொனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் நோய்த்தொற்றுப் பரவலைக் குறைக்கலாம் எனக் கூறியுள்ளது.