• Sun. Dec 22nd, 2024

உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் நடிகர் வடிவேலு

Sep 22, 2021

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு சந்தித்தார்.

நடிகர் வடிவேலு நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் சுராஜ் இயகக்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதியை சந்துத்துள்ளார் நடிகர் வடிவேலு.

நடிகர் வடிவேலு திமுக ஆதரவாளராக இருந்து அதிமுகவை விமர்சித்ததால் அவருக்குப் பட வாய்ப்புகள் பறிபோனதாகவும், ஷங்கருக்கும் அவருக்குமான பிரச்சனையில் அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டு நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது சினிமாவில் மீண்டும் நடிகர் வடிவேலு நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.