• Thu. Oct 31st, 2024

தள்ளிப்போகும் வாடிவாசல் படப்பிடிப்பு

Sep 21, 2021

வாடிவாசல் படத்துக்கு முன்பாக குறுகிய காலத்தில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம் சூர்யா.

திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது.

ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது இந்த படம் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்குக் காரணம் நீண்ட காலமாக இழுத்துக் கொண்டே செல்லும் சிறுத்தை சிவா உடனான படத்தை முடிக்க சூர்யா முடிவு செய்து குறுகிய காலத்தில் அதை முடிக்க உள்ளாராம்.