• Wed. Jan 1st, 2025

வலிமை படத்துடன் மோதும் பிரம்மாண்ட திரைப்படம்

Sep 29, 2021

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்துடன் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படம் மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பான நடந்து வருகிறது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையில் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரமாண்ட பட இயக்குநர் ராஜமவுளி இயக்கத்தில், ஜுனியர் என்.டி.ஆர் – ராம்சரண் இணைந்து நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் கொரொனா தொற்றுக் காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

எனவே இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வலிமை படத்துடன் மோத வாய்ப்புள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியாகிறது.