இலங்கையில் பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் நேற்று(07) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது கட்டுப்பாட்டு விலைகளை அகற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
எனினும் முறையற்ற விதத்தில் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.