• Fri. Nov 15th, 2024

3 ஆயிரம் பேரை கொன்ற ஹிட்லரின் காவலர் – வரலாறு கடந்த விசாரணை

Oct 9, 2021

ஜெர்மனியில் ஹிட்லர் காலத்தில் வதைமுகாமில் பணியாற்றிய காவலர் மீது 3 ஆயிரம் பேரை கொன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1943ல் இரண்டாம் உலக போர் தீவிரமடைந்திருந்த நிலையில் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி நடந்து வந்தது. அப்போது யூதர்கள், ஜிப்சிகள் என பல இனத்தவர்கள் நாஜிக்களால் வெறுக்கப்பட்டதுடன் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவம் வரலாற்றில் அழியாத தடமாக பதிந்துள்ளது.

இந்நிலையில் 1943 முதல் 1945 வரையிலான காலக்கட்டத்தில் ஜெர்மனியில் செயல்பட்டு வந்த முக்கிய வதை முகாம்களில் ஒன்றான சஹ்சென்ஹவுசன் வதை முகாமில் 3,518 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வதை முகாமில் அந்த காலக்கட்டத்தில் நாஜி அரசின் கீழ் காவலராக பணியாற்றிய 100 வயது முதியவர் தற்போது சிக்கியுள்ளார். அவர்மீது இந்த வதை முகாம் படுகொலை பழி சுமத்தப்பட்டுள்ள நிலையில் தான் யாரையும் கொல்லவில்லை என தள்ளாத வயதிலும் நீதி கேட்டு போராடி வருகிறாராம் அந்த முதியவர்.