• Wed. Feb 5th, 2025

20ஓவர் உலககோப்பை : இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணி

Oct 12, 2021

20 ஓவர் உலக கோப்பை போட்டி பயிற்சி ஆட்டத்துக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி ) இன்று வெளியிட்டுள்ளது

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன .

இந்த பயிற்சி ஆட்டத்துக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி ) இன்று வெளியிட்டுள்ளது .ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது .

அதன்படி இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது .இந்த ஆட்டம் வருகிற அக்டோபர் 18 ம் தேதி துபாயில் நடக்கிறது.

தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது .இந்த ஆட்டம் வருகிற அக்டோபர் 20 ம் தேதி துபாயில் இடம்பெறுகிறது.