தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் நானே வருவேன் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தனுஷ் தற்போது மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நானே வருவேன் படத்தில் அப்டேட்டை இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்துள்ளார்
தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளதை அடுத்து இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.