• Fri. Nov 22nd, 2024

பிலிப்பைன்சில் சூறாவளி புயல் ; பலி எண்ணிக்கை உயர்வு

Oct 16, 2021

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கே லூஜன் தீவு பகுதியில் கொம்பாசு என்ற சூறாவளி புயல் தாக்கியது.

மேரிங் என்றும் அழைக்கப்படும் இந்த புயலின் பாதிப்பில் சிக்கி 22 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர்.

இந்த எண்ணிக்கை 39 ஆக உயர கூடும் என்று தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் கவுன்சில் தெரிவித்து உள்ளது.

இதுதவிர 16 பேர் காணாமல் போயுள்ளனர். புயலால் 325 வீடுகள் சேதமடைந்து உள்ளன. அவற்றில் 89 வீடுகள் பராமரிப்பு செய்ய முடியாத நிலைக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த சூறாவளி புயலால், மொத்தம் 50 ஆயிரத்து 40 வீடுகளில் வசிப்பவர்கள் அல்லது 1 லட்சத்து 94 ஆயிரத்து 677 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சூறாவளி புயலானது பிலிப்பைன்சை விட்டு நகர்ந்து சென்று விட்டாலும் தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புயல் எதிரொலியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இதேவேளை இந்த ஆண்டில் பிலிப்பைன்சில் ஏற்படும் 13வது வெப்பமண்டல புயல் இதுவாகும்.