ஆப்கானிஸ்தான் எல்லைகளில் மருத்துவப் பொருட்கள் ஏற்றப்பட்ட 50 க்கும் மேற்பட்ட லொறிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
லொரிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய அனுமதிக்கப்படாவிட்டால், அடுத்த மாதத்திற்குள் நாடு முழுவதும் மருத்துவப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்படும் என்று தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
பெரும்பாலான மருத்துவப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் குறித்த லொரிகளுக்கு அனுமதியளிக்காமை நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
முக்கியமான மருந்துகள் பலவற்றுக்கு தட்டுப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் காபூலில் மருந்துகளை தேடும் நிலையில் நோயாளிகள் உள்ளதாக மருத்துவ தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர் அப்துல் கரீம் கோஸ்டி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று எல்லைகளில் மருத்துவப் பொருட்கள் நிறுத்தப்படுவது தங்கள் வணிகத்தை பாதிப்பதாக மருந்தக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள பொது மருத்துவமனைகள் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.