ஈரானில் புதிதாக பொறுப்பேற்ற ஆளுநரை பதவியேற்பு விழா மேடையில் ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநராக அபிதின் கோராம் நியமிக்கப்பட்டுள்ளளார். இவரின் பதவியேற்பு விழா நடந்து கொண்டிருந்தபோது திடீரென வேகமாக மேடை ஏறிய ஒருவர் அபிதினின் கன்னத்தில் அறைந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அயுப் அலிஜாதே என்ற அவர், ஆளுநரை அறைந்ததற்கான காரணம் தெரியவில்லை.