• Thu. Jan 2nd, 2025

பிரபல நடிகர் திடீர் உயிரிழப்பு ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Oct 29, 2021

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.

புனித் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாக திகழ்பவர் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவரான இவருக்கு வயது 46.

புனித் ராஜ்குமாரின் தந்தையும் புகழ்பெற்ற நடிகருமான ராஜ்குமார் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் பணைய கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.