கிறிஸ்கெயிலை நாங்கள் பார்க்கப்போவது இதுதான் இறுதி தடவையா? அபுதாபி ஷேக் ஜாயெட் மைதானத்தில் ஒன்பது பந்துகளில் 15 ஓட்டங்களை பெற்ற பின்னர் ஆட்டமிழந்து கிறிஸ்கெயில் வெளியேறியவேளை அவ்வாறே தோன்றியது.
ரி20 கிரிக்கெட்டில் அவர் தனது 1045வது சிக்சரையும் அடித்திருந்தார்.
2020 ரி20 உலககிண்ணப்போட்டியில் மேற்கிந்திய அணியின் இறுதிப்போட்டியில் பட்கமின்சின் பந்தில் கிறிஸ்கெயில் ஆட்டமிழந்தார்.
இலங்கைக்கு எதிரான நான்காம் திகதி போட்டியில் அவர்கள் தோல்வியடைந்ததால் அவர்களிற்கு அரையிறுதிக்கு செல்வதற்காக இருந்த சிறிய வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.
கிறிஸ்கெயில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதவராக தனது பட்டை ரசிகர்களிற்கு காண்பித்தவாறு சென்றார்,எல்லைக்கோட்டை கடந்ததும் அவரை பிராவோவும் ரசலும் கட்டியணைத்தனர்.
அதன் பின்னர் அவர் தனது கையுறையை அங்கு காணப்பட்ட ரசிகர்களிற்கு வழங்கினார்.
4 2வயதான கெயில் இன்னமும் தனது ஓய்வை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால் அவர் 2012-2016 இல் உலக கிண்ணத்தை – ஒரு தசாப்தத்தின் முடிவிலிருக்கும் அணியின் ஒரு பகுதியாக இந்த போட்டித்தொடரில் விளையாடினார்.
அந்த வீரர்களின் முக்கிய குழுவினர் இன்னமும் விளையாடுகின்றனர்.
அணித்தலைவர் பொல்லார்ட் தான் தொடர்ந்தும் விளையாடுவேன் என தெரிவித்துள்ள அதேவேளை பிராவோ தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
வர்ணணையாளர்கள் பகுதியிலிருந்து டரன் சமி பிசப் இருவரும் இது கெயிலின் இறுதிப்போட்டி என்ற முடிவிற்கே வந்துள்ளனர்.
டரன் சமி கெயிலுடன் இணைந்து விளையாடியாவர்- இருவரும் அவருக்கு புகழாரம் செலுத்தினார்.
அவரை ரி20யின் தலைசிறந்த வீரர் என இருவரும் வர்ணித்தனர்.
அனைத்தும் நாங்கள் இறுதி தடவையாக கெயிலை காண்கின்றோம் என்பதை வெளிப்படுத்துகின்றன என பிசப் தெரிவித்தார்.