• Tue. Mar 4th, 2025

இலங்கையின் பிரதமர் பதவி விலகத் தீர்மானம்!

Nov 19, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்துள்ளார் என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அநுராதபுரத்தில் ருவன்வெசாயவில் புத்த பெருமான் விஜயம் செய்த எட்டு தளங்கள் இருக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஒன்பதாவது தளத்தை (விகாரையை) பிரதமர் மஹிந்த ராஜபக்ச திறந்துவைக்கவுள்ளார்.

இது பௌத்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறித்த விகாரையை திறந்துவைத்த பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலகி, அரசியலில் இருந்து ஓய்வுபெற மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.