சுவீடனில் முதலாவது பெண் பிரதமராக மக்டலேனா அன்டர்சன் நியமிக்கப்பட்டுச் சில மணி நேரங்களிலேயே பதவி விலகியுள்ளார்.
கடந்த புதன்கிழமை மக்டலேனா பிரதமராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது கூட்டணிக் கட்சி அரசிலிருந்து விலகி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து அவர் பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில், குடியேற்ற எதிர்ப்பு தீவிர வலதுசாரியினர் உட்பட எதிர்க்கட்சி மூலம் வரையப்பட்ட பட்ஜெட் ஒன்றுக்கு பாராளுமன்றம் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.