இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மாற்றமடைந்த வைரஸ்களில் மிகவும் மோசமானது என கருதப்படும் வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று ஆராயவுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இன்றைய கூட்டத்தில் புதிய வைரஸ் கரிசனைக்குரியது என அறிவிப்பதா என்பது குறித்து தீர்மானி;க்கப்படும்.
32 விதத்தில் உருமாற்றம் அடையக்கூடியது என்பதால் புதிய வைரஸ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய வைரஸ் குறித்ததகவல் வெளியானதை தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்கள் சிலர் உடனடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.
சில நாடுகள் புதிய கட்டுப்பாடுகளையும் போக்குவரத்துகட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளன.
நிச்சயமற்ற தன்மை காரணமாக பங்குசந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.
புதிய வைரஸ் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களை எச்சரித்துள்ளது.
மாநில அரசாங்கங்கள் கடும் சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
தென்னாபிரிக்கா பொட்ஸ்வானா ஹொங்கொங்கிலிருந்து வரும் பயணிகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு மத்தியஅரசாங்கம் மாநில அரசாங்கங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் மாதிரிகளை மரபணுபரிசோதனைக்கு உட்படுத்துவதை உறுதிசெய்யுமாறு மத்திய சுகாதார செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னாபிரிக்காவிலிருந்தும் அதன் அயல்நாடுகளில்இருந்தும் பயணிகள் வருவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
ஆகியநாடுகளிற்கு சமீபத்தில் விஜயம் செய்த சிங்கப்பூர் பிரஜைகள் உட்பட ஏனையவர்களிற்கு அனுமதி மறுக்கப்படும்என சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
இத்தாலியும் இதேபோன்ற தடையை அறிவித்துள்ளது. மாற்றமடைந்த புதிய வைரஸ் குறித்து எங்கள் விஞ்ஞானிகள் ஆராய்ந்துவருகின்றனர் என தெரிவித்துள்ள இத்தாலிய மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானும் தென்னாபிரிக்கா உட்பட ஐந்து ஆபிரிக்க நாடுகளின் பயணிகளிற்கான எல்லை கட்டுப்பாட்டைஅறிவித்துள்ளது.