ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது .
இதன்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீராக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டுவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர்-லபுஸ்சேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
சிறப்பாக விளையாடிய வார்னர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். சதத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்டுவர்ட் பிராட்யிடம் கேட்ச் குடுத்து ஆட்டமிழந்தார்.
வார்னர் சதத்தை தவறவிட்டதால் ரசிகர்கள் கவலையடைந்தனர்.இந்நிலையில் டேவிட் வார்னர் கவலையுடன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.
மைதானத்தை விட்டு அவர் வெளியேறிய போது, முதல் வரிசையில் நின்றிருந்த சிறுவர்கள் சிலர் வார்னருக்காக உற்சாக கோஷத்தை எழுப்பினர்.
இதனை கண்ட வார்னர், தான் அணிந்து விளையாடிய கையுறையை ஒரு சிறுவனுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டு சென்றார்.
வார்னரின் இந்த அழகான செயல் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் தெரிந்தது. இதனால் ஓவல் மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் டேவிட் வார்னருக்காக எழுந்து நின்று கைத்தட்டினர்.
மேலும் இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.