• Thu. Nov 21st, 2024

சீனா 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்

Jun 4, 2021

கொரோனா வைரஸை உலகுக்கு ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொவிட்-19 தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், ‘சீன வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என ட்ரம்ப் கூறியது சரியே என தற்போது அனைத்து தரப்பினரும் குறிப்பாக எதிரி என்று சொல்லப்படுபவர்களும் கூறத்தொடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் மூலம் உலகுக்கு ஏற்படுத்திய பேரழிவுக்காக அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகளுக்கு சீனா 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

வூஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்தே வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை சீனா மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.