• Thu. Dec 26th, 2024

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு

Dec 22, 2021

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

மொத்தமாக 77 பேர் ஓமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் தொற்றால் உயிரிழப்பு இதுவரை ஏற்படவில்லை.