திரையுலகில் உள்ள நடிகைகள் பலர் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.
அந்த வகையில் Big Boss அபிராமி, Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியினுள் இருந்தார்.
வெளியே வந்த பிறகு சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார்.
தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவரிடம் சமூக வலைத்தளத்தில் ஒரு நபர், உங்கள் முன்னழகு பெரிதாகி விட்டது என்கிற ரீதியில் கிண்டலடிக்க, கடுப்பாகிவிட்டார் அபிராமி.
“என்னுடைய B**s பெரிதாகி விட்டது என கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான்.
உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான். என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள்.பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மேனர்ஸ் இல்லாத நாடு இல்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.