இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில், உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரகானே டக்-அவுட்(0) ஆனார்.அதன்பின் களமிறங்கிய ஹனுமா விஹாரி, கேப்டன் கே எல் ராகுல் உடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க போரடினார். விஹாரி 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிய மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே எல் ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வின் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பண்ட் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரவிச்சந்திரன் அஸ்வின் 46 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சண் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து, 202 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.ஆட்டமிழந்தது!