நம் பாரம்பரிய சமையலில் சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் சேர்க்கப்படுகின்றது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் இஞ்சியின் பல அற்புதம் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.
- இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
- இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
- இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக்கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
- இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீருவதுடன் சுறுசுறுப்பு ஏற்படும்.
- காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீருவதுடன், உடம்பும் இளமையாக இருக்கும்.
- பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
- அளவோடு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளை நீங்கள் பெற முடியும். அல்சர் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று பின்பு எடுத்துக்கொள்ளவும்.