• Fri. May 9th, 2025

வலிமை படத்தின் புதிய திகதி இதோ

Jan 26, 2022

நடிகர் அஜித் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக அஜித் படம் வெளியாகமலிருந்த நிலையில் வலிமை படத்தின் வெளியீட்டு அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில் கரோனா பரவல் உச்சமடைந்ததால் வலிமை படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. வலிமை மட்டுமல்லாமல் பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகளை முன்னிட்டு வெளியாகவிருந்த ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற படங்களின் வெளியீட்டும் ஒத்திவைக்கப்பட்டது.

ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதே ஷ்யாம் திரைப்படமும் மார்ச் 18ல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக வலிமை திரைப்படத்தை சற்று முன்னதாக மார்ச் 4 ஆம் திகதி வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.