• Wed. Dec 25th, 2024

கால்பந்து வீரர் மேசன் க்ரீன்வுட் கைது..!

Feb 2, 2022

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியில் விளையாடும் க்ரீன்வுட், பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

க்ரீன்வுட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண், சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்தது.

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கழகம் க்ரீன்வுட்டை இடைநீக்கம் செய்துள்ள நிலையில், மீண்டும் அறிவிக்கப்படும் வரை அவர் ஓல்ட் ட்ராபோர்ட் க்ளப்பிற்காக விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மேலும் விசாரணை நடைபெற உள்ளநிலையில் க்ரீன்வுட் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்துள்ளது.